கந்தப்பளையில் கஞ்சா வளர்த்த நால்வர் கைது!

– க.கிஷாந்தன்

நுவரெலியா – கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெத்துன்கம மாவத்தையில், கஞ்சா செடிகளை வளர்த்த 4 இளைஞர்களை, கந்தப்பளை பொலிஸார், கைது செய்துள்ளனர்.

கெமுனு மாவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கந்தப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த இளைஞர்களின் வீட்டுப் பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார், அங்கு தேடுதலில் ஈடுப்பட்ட போது, தண்ணீர் தாங்கி ஒன்றுக்கு அருகில் வளர்க்கப்பட்ட மூன்றரை அடி உயரமான இரண்டு கஞ்சா செடிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இவர்களை நுவரெலியா மாவட்ட நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles