கந்தப்பளை – கொங்கோடியாவில் மண்சரிவு! போக்குவரத்து பாதிப்பு!!

நுவரெலியா, கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொங்கோடியா தோட்டத்தில் உள்ள வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

கந்தப்பளை நகரில் இருந்து கொங்கோடியா, கல்லாலவத்தை தோட்ட வழியாக இராகலையை நோக்கி செல்லும் பிரதான வீதியில் இந்த மண் சரிவு ஏற்பட்டு இவ் வீதியூடான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், காலநிலை மாற்றத்தினால் கந்தப்பளை பிரதேசத்தில் (18.10.2023) இன்று அதிகாலையில் முதல் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கொங்கோடியா தோட்ட பகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்டு செப்பணிடப்பட்ட வீதியில் பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

எனவே இவ் வீதியூடாக விவசாய காணிகள் மற்றும் குடியிறுப்புகளுக்கு பயணிக்கும் பொது மக்கள் மாற்று வழியை பயன்படுத்துமாறு கந்தப்பளை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் இவ் வீதி ஊடான வாகன போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles