ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் விசாந்தினி என்ற 8 வயதுச் சிறுமி வீட்டில் உள்ள கூரை கம்பத்தில் சேலை பட்டியில் கழுத்து இறுகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
சிறுமியை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் இன்று காலை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
