கனடாவில் உற்பத்தியாகும் எந்த பொருட்களும் தங்களுக்கு தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படும் எனவும், எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் உட்பட கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்திக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
மேற்படி உத்தரவு அமுலுக்கு வந்த நிலையில்,அமெரிக்க பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
அதேபோல், சீனா, மெக்சிகோ நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி,
‘ வரிகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளுடன் நாடுகள் செயல்படுவதால், அமெரிக்க மக்கள் சில வலியை உணரக்கூடும். வலிக்கு விலைமதிப்பு அதிகம். கனடாவிடம் உற்பத்தியாகும் எந்த பொருட்களும் எங்களுக்கு தேவையில்லை.
எங்களுக்கு ஆற்றல் இருக்கிறது. நாங்கள் சொந்தமாக உருவாக்குவோம் எங்களுக்கு தேவையான அளவைவிட அதிகமாக வைத்திருப்போம். கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக உருவாக்குவோம். அதன் மூலம் கனடா மக்களுக்கு மிக குறைந்த வரி மற்றும் இராணுவ பாதுகாப்புகள் ஆகியவற்றை உருவாக்குவோம்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.