” கப்புட்டாவின் ஆலோசனையின் பிரகாரமே நாட்டில் ஆட்சி நடக்கின்றது. எனவே, ‘கப்புடா’வை (காகம்) தேசிய பறவையாக அறிவித்தால்கூட பரவாயில்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
” விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், உரப்பிரச்சினையால்தான் இந்நிலைமை ஏற்பட்டது. இவற்றுக்கு தீர்வை தேடாமல், தேசிய விலங்கான மர அணிலை மாற்ற வேண்டும் என யோசனை முன்வைக்கப்படுகின்றது.
நமது நாட்டை கப்புடா (பஸில்)தான் ஆள்கின்றது. எனவே, தேசிய பறவையாக கப்புட்டாவை அறிவித்தால்கூட பரவாயில்லை.
சர்வக்கட்சி அரசு என்ற போர்வையில் அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை.” – எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
