“ பெருந்தோட்டக் கம்பனிகளுடன் ‘டீல்’ முடிந்துவிட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நாளைய கொழும்பு போராட்டமென்பது கூட்டு நாடகத்தின் இறுதி அங்கமாகும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
கலஹா பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“இதொகாவின் சம்பள உயர்வு போராட்டமென்பது கூட்டு நாடகம். இந்த கூட்டு நாடகத்தின் இறுதி நிகழ்ச்சி நிரலே கொழும்பு போராட்டமாகும். கம்பனிகளுடன் அவர்கள் உடன்பாடு செய்துவிட்டார்கள்.
அடுத்தவாரம் ஆகும்போது 100 ரூபாவைத்தான் தந்தார்கள், 200 ரூபாவைத்தான் தந்தார்கள், அதுவும் போராட்டம் நடத்தியே இதனை பெற்றுக்கொண்டோம் என்றெல்லாம் கூறுவதற்கான நாடகத்தின் ஒத்திகையே கொழும்பு போராட்டம்.
எமது மக்களுடன் வயிற்று பசியும், வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். ஆயிரத்து 700 ரூபாவுக்கு குறைவான சம்பளத்தை ஏற்பதற்கு தோட்டத் தொழிலாளர்கள் தயாரில்லை.” – என்றார்.