கம்பனிகளை மகிழ்விக்கவே இதொகா போராட்டத்தை குழப்புகிறார் வேலுகுமார்

நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் முதலாளியான கம்பனிகாரர்கள், வேலுகுமாருக்கு தவறான தகவலை வழங்கிவிட்டதாக இ.தொ.காவின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“ தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கு குரல் கொடுக்காமல், கம்பனிக்கு ஆதரவாக செயற்படும் கம்பனியின் தரகர் தான் வேலுகுமார், அவர் தரகர் என்பதால் கம்பனி அனைத்து விடயத்தையும் வேலுகுமாரிடம் சொல்லி விடுவதில்லை.

1700 என்றால் டீல் இல்லையேன் நோ டீல் இது தான் இ.தொ.காவின் டீல்.
தோட்ட தொழிலாளர்களுக்காக ஒரு போராட்டம் கூட செய்ய வக்கில்லாதவர்கள் தான் வேலுகுமாரும் அவருடைய கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியும்.

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், கம்பனிக்கு எதிராகவும் ஒரு போராட்டம் செய்ய வக்கில்லாமல் அறிக்கை அரசியல் மட்டும் செய்பவர் தான் 10 பைசா வேலுகுமார். இவர்களுக்கு எல்லாம் எதற்கு கட்சி, எதற்கு தொழிற்சங்கம் ? ஜனநாயக மக்கள் முன்னணியால் சம்பள உயர்விற்கு ஒரு 10 சதம் பிரயோஜனம் இல்லை.

2019 ஆம் ஆண்டு காலத்தில் தோட்ட தொழிலாளர்களுக்காக போராட்டம் நடத்தி 50 ரூபா கூட பெற்றுக் கொடுக்காத ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற வெட்கம் இல்லாத கட்சி அல்ல இ.தொ.கா.

இ.தொ.கா போராட்டத்தில் இறங்கினால் உரிய தீர்வை பெற்று விடும்என்பது எங்களுக்கும் தெரியும். நீங்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். இதனால் தான் வேலுகுமார் அவருடைய அறிக்கையில் கூறியுள்ளார் சம்பளம் பெற்றுக் கொடுக்கும் முடிவிற்கு வந்து விட்டீர்கள் அதனால் போராட்டம் செய்து தான் சம்பளம் கிடைத்தது என சொல்லுவீர்கள் என வேலுகுமார் அவர்களே நீங்களே உங்களுடைய அறிக்கையில் குலம்பியுள்ளீர்கள்.

கம்பனிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்தை உதாசீனப்படுத்தி, போராட்டத்தை தோல்வியடைய செய்து தங்களுடைய முதலாளியை சந்தோச படுத்த நினைக்கும் உங்களுடைய கனவு ஒரு போதும் நிறைவேறாது.

இ.தொ.கா தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்கும். அறிக்கை அரசியல் செய்யும் வேலுகுமார் , உங்களுக்கு ஒன்றும் முடியாது என்பது உங்களுடைய கடந்த கால அரசியல் நடவடிக்கை ஊடாக அறியக்கூடியதாக உள்ளது. கம்பனியை மகிழவைக்க இ.தொ.காவை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு,பெற்ற வாக்குகளுக்காக மக்களுக்கு ஏதேனும் செய்ய முற்படுங்கள்.” – என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Related Articles

Latest Articles