கம்பளையில் இடம்பெற்ற விபத்தில் ஆஸ்திரேலிய பெண் உயிரிழப்பு

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட, கம்பளை, ஹேம்மாத்தகம வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆஸ்திரேலிய பெண்ணொருவர் (வயது – 67) பலியாகியுள்ளார்.

ஹேம்மாத்தகம நோக்கி பயணித்த வாகனமொன்று 12 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது காரின் சாரதி, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகள் ஆகியோர் வாகனத்தில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மூவரும் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளார்.

சாரதி கவனமின்மையே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles