கம்பளையில் தமிழ் பாடசாலையொன்றில் மர்மபொருள் வெடித்ததில் மாணவர்கள் மூவர் காயம்

கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட மாவத்துற கலைமகள் வித்தியாலயத்தில் மர்ம பொருளொன்று, வெடித்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (17) இடம் பெற்ற மேற்படி சம்பவத்தின் போது காயங்களுக்குள்ளான மாணவர்களில் இருவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன் ஆறாம் தரத்தில் கல்வி பயின்றுவந்த சண்முகராஜ் சதுர்ஷன் என்ற 11வயது மாணவன் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக காயமடைந்த மாணவர் ஒருவரின் தந்தை கருத்து தெரிவிக்கையில் ,

” குறித்த வெடிப்பொருள் மிருக வேட்டைக்காக வைக்கப்பட்ட வாய் வெடியாக இருக்கலாம் என்று கூறினார்.

இது தொடர்பாக ஸ்தல விசாரணைகளை மேற்கொண்ட கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெர்ணான்டோ குறிப்பிடுகையில், குறித்த வெடிப்பொருள் (மிருக வேட்டைக்கு வைக்கப்பட்ட வாய் வெடி) அல்ல எனவும் மாணவர்களால் கொண்டுவரப்பட்ட (பட்டாசு) வெடியா அல்லது வேறு ஏதாவதா பொருளா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

கம்பளை நிருபர்

Related Articles

Latest Articles