கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயமாலப்புர பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தளபாடங்களை களவாடிய நபரொருவர் கம்பளை பொலிஸாரால் நேற்று (30.11.2020) கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் தளபாடங்களை களவாடிய குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார். பொலிஸாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இந்நிலையில் கம்பளை பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவினர் அவர் ஒளிந்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து, சந்தேகநபரையும் நேற்று கைது செய்தனர்.
மேசை, கதிரைகள் உட்பட களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.கொரக்கொய டொன்சைட் எனும் பகுதியில் மறைந்திருந்தவேளையிலேயே அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சம்பத் சம்பத் விக்கிரமரத்தினவின் வழிகாட்டலுக்கமைய, குற்றத்தடுப்பு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார தலைமையிலேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
