கம்பளையில் மாணவி தாக்கப்பட்டு கொலை! இருவர் கைது – விசாரணைகள் ஆரம்பம்!!

கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இசம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறியதந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சிறியதந்தை நேற்று முன்தினம் தினம் அவரை தாக்கியுள்ளார். அதன்பின்னர் நேற்று காலை சிறுமி உடல்நிலை சரியில்லாமல் புலம்பிய போது, சிறுமியின் தந்தை மீண்டும் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

பின்னர் சிறுமியை அவரது தாயார் அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் மயக்கமடைந்த சிறுமியை கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளையில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் நிபுனி நுவந்திகா பண்டார (வயது – 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கம்பளை நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இடம்பெற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் சிறியதந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், இச்ம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கம்பளை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles