கம்பளை, போத்தலாப்பிட்டிய பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையினை கடக்க முயன்ற நவீனரகக் கார் ஒன்று புகையிரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இரு சிறுவர்கள் உட்பட ஏழுபேர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (23) இரவு ஒன்பது மணியளவில் கண்டியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த கார் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
கல்முனையிலிருந்து கம்பளை போத்தலாப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்தவர்கள் பயணித்த காரே விபத்தில் சிக்கியுள்ளது.
கடந்த சிலகாலங்களுக்கு முன்னரும் மூன்று வாகனங்கள் இதே இடத்தில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
மேற்படி பிரதேசத்தில் அடிக்கடி நிகழும் விபத்துக்குகள் தடுப்பதற்காக பாதுகாப்பு கடவை ஒன்றை அமைப்பதற்காக பொது மக்கள் நிதி சேகரிப்பதற்காக புகையிரத திணைக்களத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்த கடிதத்திற்கு பல மாதங்கள் கடந்தும் பதில் தராமை குறித்து பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.