கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவிலில் சங்காபிஷேகம்!

கம்பளை, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில், 1834ஆம் ஆண்டு நாட்டுக்கட்டை நகரத்தார்களால் கட்டப்பட்டதாகும். அதன் பின் கம்பளை பொது மக்களால் 2022ம் ஆண்டு இந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு 23.03.2022 மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

03.02.2023 முதல் 05.02.2023 வரை மூன்று நாட்கள் தை பூச உற்சவ விஷேட அலங்கார பூஜைகள் நடைபெறும். 03.02.2023 வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு திருமஞ்சனம் எடுத்தல் நடைபெறும். காலை 8.00 மணிமுதல் அஷ்டத்திர சங்காபிஷேகம் (108) நடைபெற்று பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜைகளைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

பிற்பகல் 3.00 மணிக்கு புதிதாய் வடிவமைக்கப்பட்ட எண்கோண முகபத்திர கமலகாரத் சித்திரத்தேர் வெள்ளோட்டம் நடைபெறும். மாலை 7.00 மணிக்கு முதல் விஷேட வசந்தமண்டப பூஜை, சுவாமி உள் வீதி உலா வருதல் என்பன நடத்தப்பட்டு திருவருட் பிரசாதம் வழங்கப்படும்.

இரண்டாம் நாள் 04.02.2023 காலை 9.00 மணிக்கு அஷ்டத்திர சங்காபிஷேகம் (108) நடைபெற்று பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜைகளைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.மூன்றாம் நாள் 05.02.2023 காலை 9.00 மணிக்கு அஸ்டோத்தர சங்காபிஷேகம் (108) நடைபெற்று பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை நடாத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். மாலை 4.00 மணி முதல் பொங்கல் பூஜை நடத்தப்படும்.

தொடாந்து சக்கர காவடி உள் வீதி உலா வருதலும் மாலை 6.00 மணிமுதல் விஷேட வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர சுவாமியுடன் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி வெளி வீதியில் வந்து அருள்பாலிக்கும் தேர்த் திருவிழா நடைபெறும்.

இந்த ஆலயத்தில் வைகாசி விசாகம், ஆடிவேல், கந்த சஷ்டி முதலிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. கமபளை வாழ் இந்து மக்களின் குறை தீர்த்து எமைகாக்கும் குமரனவன் திருத்தேரை வடம் பிடிக்க வரும்படி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில் ஆலய அறங்காவலரும் பரிபாலன சபையினரும் அழைக்கின்றனர்.

டி.வசந்தகுமார்

Related Articles

Latest Articles