கம்மன்பிலவின் வீட்டில் இரகசிய சந்திப்பு? நடந்தது என்ன?

கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக்கட்சிகள், அரசின் இத்திட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளன.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் அரசு வசமே இருக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தி பங்காளிக்கட்சிகளால் அண்மையில் ‘மக்கள் சபை’ எனும் தலைப்பின்கீழ் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தை நாடு முழுவதும் நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் வீட்டில் நடைபெற்ற இரகசிய சந்திப்பொன்றின்போதே பங்காளிக்கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

Related Articles

Latest Articles