கருணா, பிள்ளையான் எமக்கு உளவு தகவல்களை வழங்கவில்லை!

” பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை கருணா அம்மான் எமக்கு வழங்கவில்லை. அதேபோல கருணா, பிள்ளையான் ஆகியோர் உளவு தகவல்களையும் வழங்கவில்லை.” – என்று இறுதிக்கப்பட்டப்போரின்போது இராணுவத தளபதியாக செயற்பட்ட பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின்போது, போரை முடிப்பதற்கு கருணா, பிள்ளையான் ஆகியோர் வழங்கிய தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பொன்சேகா மேலும் கூறியவை வருமாறு,

” கருணா அம்மானிடம் 150 பேர் இருந்தனர். அவர்களில் 80 பேர் சிறுவர் போராளிகள். எஞ்சியோரில் சிலர் கொழும்பில் இருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கினோம். புலிகள் அமைப்பில் இருந்து, வடக்கில் படையினருக்கு எதிராக சண்டை இட்டிருந்தாலும், பிரபாகரன் எங்கிருந்தார் என்ற தகவலைக்கூட கருணா எமக்கு வழங்கவில்லை.

அதேபோல நான் போர் செய்த வியூகத்தக்கு அமைய எனக்கு உளவு தகவல்கள் தேவைப்படவும் இல்லை. ஏனெனில் நாம் தலையை தூக்கும்போது எமக்கு அருகில் பயங்கரவாதிகள் இருந்தனர். எனவே, உளவு தகவல்கள் அப்போது தேவைப்பட்டிருக்கவில்லை. எதிரிகள் எங்கு இருக்கின்றார்கள் என கருணாவிடம் கேட்கவேண்டிய தேவையும் இருக்கவில்லை.

வாழைச்சேனைக்கு மேல் கஜு வத்தை என்ற ஒரு இடம் உள்ளது. அந்த இடத்தில் மாத்திரமே கருணாவின் படை பயன்படுத்தப்பட்டது. அதுவும் பிரதேசம் தொடர்பில் அனுபவம் இருக்கும் என்பதால் அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். அதுவும் தாக்குதலை முழுமைப்படுத்தாமல் காட்டுக்குள் தப்பி வந்துவிட்டனர்.

எப்போதும் கருணா, பிள்ளையான் எமக்கு உளவு தகவல்களை வழங்கவில்லை. புலிகள் அமைப்பை தமிழர்களின் இராணுவம் என்றே தமிழர்கள் சிலர் கருதினர். புலிகள் தாக்குதல் நடத்தும்போது டயஸ்போராக்கள் சிலர் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். புலிகள் அமைப்புடன் மோதினாலும், புலிகள் தமிழர்களின் இராணுவம் என்ற உணர்வு கருணா, பிள்ளையானிடமும் இருந்தது.

இராணுவ முகாம்களுக்குள் கருணாவின் ஆட்களை நாம் வைத்திருக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles