கருணா வெளியேறியது புலிகளுக்கு இழப்பா?

” கருணாவின் பிரிவால் புலிகள் அமைப்பு பிளவுபடவில்லை. இரண்டே வாரங்களில் கிழக்கின் பலத்தை கைப்பற்றினர். இதனால் கருணாவுக்கு கொழும்புக்கு தப்பியோடவேண்டிய நிலை ஏற்பட்டது.” – என்று இறுதிகட்டப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மான் வெயியேறியமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” கருணா வெளியேறினார் என்பதால் புலிகள் அமைப்பு இரண்டாக பிளவுபடவில்லை. இரண்டு வாரங்கள் கிழக்கை,கருணா அம்மான் கைப்பற்றி வைத்திருந்தார். எனினும், பிரபாகரன் தாக்குதல் அணியொன்றை அனுப்பியிருந்தார். வாழைச்சேனை பகுதியில் உள்ள கஜுவத்தை  பகுதிக்கு கடல்வழியாக வந்து, தாக்குதல் நடத்தி கருணாவின் உறுப்பினர்கள் கொன்றனர்.
இத்தாக்குதலால் கருணாவுக்கு நடுக்கம் வந்துவிட்டது. 2 நாட்களுக்குள் தம்முடன் இருந்த பெண் போராளிகள், சிறுவர் போராளிகள் ஆகியோரை ஆளுதங்களை போட்டுவிட்டு வீடுகளுக்கு தப்பிச்செல்லுமாறு கூறியதுடன், சுங்காவில் பகுதியில் பிள்ளையானின் முகாமில் தஞ்சமடைந்தார். 150 பேர்தான் எஞ்சினர். அதிலும் பலர் சிறுவர் போராளிகள். அங்கிருந்தும் கொழும்புக்கு அவர் ஓடிவந்தார்.
அதன்பின்னர் ரமேஷ் என்பவர் வீடுகளுக்கு சென்ற போராளிகளை ஒன்றிணைத்து இரண்டு, மூன்று வாரங்களுக்குள் கிழக்கில் பலத்தைக் கைப்பற்றினார். எனவே, கருணாவின் பிரிவால் கிழக்கில் புலிகளின் பலம் குறையவில்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles