பொகவந்தலாவையில், கொழுந்து கொய்து கொண்டிருந்த நான்கு பெண்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று பிற்பகல் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவை, பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த 4 பெண்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், இதில் கர்ப்பிணி பெண்ணொருவர் உள்ளடங்குகின்றார் எனவும் தெரியவருகின்றது.
பொகவந்தலாவையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா , கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.