கறுப்பு ஜுலை கலவரம்: தமிழர்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்!

“1983 ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு கறும் புள்ளியாக காணப்படுகிறது.41 வருடங்களுக்கு முன்னர் நேர்ந்த சம்பவங்கள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தின.அக்காலப்பகுதியில் நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை.இருப்பினும் நாட்டு பிரஜை என்ற ரீதியில் தமிழர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றியதாவது,

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் போது உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டன.

இவ்விடயம் குறித்து நீர்ப்பாசனத்துறை அமைச்சு அறிவியல் ரீதியில் முன்னெடுத்த ஆய்வு அறிக்கைக்கு அமைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி,நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட நான் ஒன்றிணைந்து கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமைக்கு மன்னிப்பு கோரும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ஆகவே முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம். அத்துடன் கவலையடைகிறோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles