கொழும்பிலிருந்து பதுளையை நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயில் நாவலப்பிட்டிய ரயில் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு உட்பட்ட கலபொட ரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ரயில் பாலம் பகுதியில் (30) இன்று அதிகாலை தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டிய புகையிரத கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில் சேவை, ஹட்டன் புகையிரத நிலையம் வரை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
-ஆ.ரமேஸ்-