2020 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை பரீட்சையில் கண்டி, கலஹா ஸ்ரீ சண்முகா ஆரம்ப பாடசாலை மாணவனான டி. யஸ்வின் 192 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேற்படி பாடசாலை வரலாற்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவரொருவர் 192 புள்ளிகளைப் பெற்றமை இதுவே முதன்முறையாகும். கண்டி கல்வி வலயத்தில் தமிழ் மொழி பிரிவிலும் இவர் பெற்ற புள்ளியே இம்முறை அதிகூடிய புள்ளியாகும்.
தெல்தோட்டை ஜத்லெண்ட் பகுதியைச்சேர்ந்த தியாகராஜா – விஜயராணி தம்பதியரின் புதல்வரான யஸ்வினுக்கு தற்போது பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.
அத்துடன், அதிபர் திருப்பதி, வகுப்பாசிரியர் திருமதி எஸ்.மஞ்சுலா உட்பட ஆசிரியர் குழாமுக்கு பழைய மாணவர்களும், கல்வி சமூகத்தினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
இப்பாடசாலையில் வளப்பற்றாக்குறை இருப்பதால் அவற்றை நிவர்த்தி செய்துகொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பா.திருஞானம்
