லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன், கல்கந்தை தோட்ட பிரிவில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்சார கசிவினால் இத்தீ பரவல் ஏற்பட்டதா அல்லது எவரேனும் குறித்த நிலையத்துக்கு தீ வைத்துள்ளனரா என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
மக்கள் குடியிருப்பு அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையிலேயே குறித்த சிறுவர் அபிவிருத்தி நிலையம் காணப்படுகின்றது.
தீ பரவலையடுத்து பிரதேச மக்கள் கடும் போராட்டத்துக்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனால் பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் கூரை பகுதி சேதமடைந்துள்ளதுடன், சிறார்களின் புத்தகங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
ஆ.ரமேஷ்