கல்கிசை, வட்டாரப்பல வீதி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
36 வயது நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், காயமடைந்த 20 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளிவராத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
