உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் அண்மையில் ஒரு திருமணத்தில் வறுத்த கோழி பரிமாறுவதில் தகராறு ஏற்பட்டது.
மணமகன் வீட்டாருக்கு நடைபெற்ற விருந்தில் குறைந்த அளவுக்கு கோழி இறைச்சித் துண்டுகள் பரிமாறப்பட்டதாம்.
மேலும் விருந்து வகைகளைப் பரிமாறும் நபர்கள் தங்களை மோசமாக நடத்தியதாகவும் மணமகன் வீட்டார் கோபப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாருடன் சண்டை போட்டனர். ஒரு கட்டத்தில் இரு வீட்டாரும் கைகலப்பில் ஈடுபட்டு திருமண மண்டபமே களேபரமானது. இதையடுத்து அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
பொலிஸார் தலையீட்டின் பின்னர் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திருமண வீட்டில் நடந்த சண்டையில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருமண வீட்டில் நடந்த சண்டை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
		
                                    









