களவாடப்பட்ட தடுப்பூசிகள் – விசாரணை வேட்டை ஆரம்பம்!

காலி ஹபராதுவ பகுதியில் சீனத் தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 30 தடுப்பூசிகளே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன எனவும், அவற்றின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாவெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியால் நேற்று ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றிய சாரதி மற்றும் ஊழியர் ஒருவர் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை மேற்கொள்வதற்கு காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால், காலி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles