கள்ளக் காதலியுடன் விடுதிக்கு சென்ற குடும்பஸ்தர் மாரடைப்பால் உயிரிழப்பு

அநுராதபுரத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் காதலியுடன் தங்கியிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவர்.

குறித்த நபர் தனது கள்ளக்காதலியுடன் விடுதிக்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அன்று மதியம் ஒரு மணியளவில் அவர் விடுதியில் திடீரென விழுந்திருந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி திடீர் மாரடைப்பு ஏற்பட்டதனால் மரணம் நிகழ்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles