நாவலப்பிட்டி கடியலேன பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மரத்தில் இருந்த குளவிக்கூடுமீது கழுகு மோதியதால் குளவிகள் கலைந்துவந்து கொட்டியுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட 69 வயதுடைய நபர் உடனடியாக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.