காக்காவும், மைனாவும் மீண்டெழ பிரயத்தனம் – சஜித் விளாசல்

” நாட்டை வங்குரோத்து அடையவைத்த காக்காக்களும், மைனாக்களும் (ராஜபக்சக்கள்) மீண்டும் எழுச்சி பெற கடும் பிரயத்தனம் செய்கின்றன.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பியகம பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டை வங்குரோத்து அடைய வைத்த தரப்புகளுடன் நாம் இணையவில்லை. அன்று நாம் எடுத்த முடிவு சரியென்பது இன்று உறுதியாகின்றது.” – எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மேளனம், கால்நடைகளின் மாநாடு எனவும் சஜித் விமர்சித்துள்ளார்.

 

Related Articles

Latest Articles