காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

ஹட்டன், நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்திற்கு அருகில் கையடக்க தொலைபேசி ஒன்றையும் ஒரு சோடி பாதணிகளையும் கண்ட மக்கள் இன்று (17) காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன் பின்னர் அங்கு சென்ற பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நோர்வூட் மேற்பிரிவை சேர்ந்த 20 வயதான சரத்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles