மத்திய காசா பகுதியில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் சுகாதார அமைச்சு தகவல் தெரிவிக்கின்றது.
அத்துடன், அல்-மகாசி முகாமில் உள்ள வீடுகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கி அழித்தது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேல்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி போரை தொடங்கி, கடும் தாக்குதல் நடத்திவருகின்றது.
தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பின்னர் இஸ்ரேல் நடத்திய மிக மோசமான தாக்குதல் இதுவாகும் என மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகளும் கண்டித்துள்ளன.