காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!

காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.

இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்பிலும் போர் நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து உள்ளனர்.

டிரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது. டிரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ் மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அதேவேளை, குறித்த அமைதி ஒப்பந்தம் மகத்தான சாதனை என்று ஆஸ்திரேலிய பிரதி பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்தார்.

அத்துடன், அமெரிக்காக பாடுபட்ட ட்ரம்ப் நிர்வாகத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.
காசாவின் மீள் கட்டமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles