அம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்வெவ கிளிபுன்ன பகுதியில் வயல் வெளியில் காட்டு யானையை வெடி வைத்து கொன்று , அதனை வயல் வெளியில் புதைத்த குற்றச்சாட்டில் வனஜீவராசி அதிகாரிகளினால் 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வனஜீவராசி அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வனஜீவராசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபரை வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வன ஜீவராசிகள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராமு தனராஜா










