மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹயபுர பகுதியில் இன்று அதிகாலை யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
44 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் தனது வீட்டு பகுதிக்கு வந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட வேளையில் யானை தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹியங்கனை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி W.W.C.R. விஜேரத்னவின் தலைமையில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ராமு தனராஜா
