முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் 20 ஆவது கிலோமீற்றர் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை மண்வெட்டி பிடி வெட்டுவதற்காக அவர் சென்ற வேளையிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த அனர்த்தத்தில் வவுனியா, மெனிக்பாம் கிராமத்தைச் சேர்ந்த – ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் வசித்து வருகின்ற – பச்சைமுத்து புலேந்திரன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










