காட்டு யானை தாக்கி வயோதிபர் பலி – திருகோணமலையில் சோகம்

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை யானை தாக்கி வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சேருநுவர-ஆர்.பீ.04 பகுதியைச் சேர்ந்த பி.எச்.டி.சுவேற்றி சவரிமுத்து (77 வயது) ஏன்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றவேளையிலேயே யானை தாக்கியுள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles