‘காணாமல்போன இரு சிறார்கள் 45 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு’

காணாமற்போனதாக தேடப்பட்டு வந்த கொட்டதெனியாவ – வத்தேமுல்ல பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

10 மற்றும் 12 வயதான குறித்த சிறுவர்கள் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்தனர்.

45 நாட்களுக்கு பின்னர் குறித்த இருவரையும் பெண் ஒருவர் மீரிகமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ கூறினார்.

சிறுவர்கள் இருவரையும் கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இரு சிறுவர்களும் எவ்வாறு காணாமல் போனார்கள், குறித்த காலப் பகுதியில் அவர்கள் இருந்த இடம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles