அத்தனகல, ஒகடபொல பகுதியில் இருந்து காணாமல்போன யுவதி நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை யுவதியின் தாயார் ‘மலையக குருவி’யிடம் இன்று காலை உறுதிப்படுத்தினார்.
பாத்திமா இல்மா (17) என்ற குறித்த யுவதி நேற்று (18) காலை முதல் காணாமல்போயிருந்தார். இது தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் யுவதியின் தாயார் இன்று காலை கூறியவை வருமாறு,
” தொலைபேசி பாவிக்க வேண்டாமென மகளிடம் கூறினேன். இதனால் இருவருக்குமிடையில சிறு தர்க்கம் ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று காலை முதல் அவர் காணாமல்போயிருந்தார்.
இரவு 9 மணியளவில் தெஹிவளை பொலிஸாரிடமிருந்து, மகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் 11 மணியளவில் மகளை நாம் பொறுப்பேற்றோம்.” – என்றார்.
குறித்த யுவதி தனது நண்பர்களின் வீட்டுக்கு சென்றிருக்ககூடும் எனவும் குடும்பத்தார் தெரிவித்தனர்.
