காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 30 ஆம் திகதி போராட்டம்

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

” வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை காலை மன்னாரில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மன்னாரில் முன்னெடுக்க உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டம் மன்னார் ‘சதொச” மனித புதைகுழியிலிருந்து ஆரம் பித்து பவனியாக மன்னார் நகர சபை பொது விளையாட்டு மைதானத்தைச் சென்றடையும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டஉறவுகளை தேடி 14 வருடங்களாக நீதிக்காக போராடும் தாய்மார்களின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக்கொள்கிறோம். தமிழ் தேசியத்தில் பணிபுரியும் – தமிழ் தேசியத்தை நேசிக்கும் – அனைவரும் எங்களுடன் கைகோர்க்க வேண்டும். ” எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஐந்து வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் அனைத்து தரப்பினரும் எங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், காணாமல் போன உறவுகளின் போராட்டத்தை மழுங்கடிக்கும் வகையில் எமது பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ், நஷ்ட ஈடு வழங்க அரசாங்கம் முயல்கிறது.
ஆனால் எமக்கு நீதி வேண்டும். எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கேட்கின்றோம். அதனால் தான் இதுவரை இலங்கை அரசை நம்பவில்லை. இனியும் நம்பப்போவதில்லை.

இவ்வாறானதொரு சம்பவம் இலங்கையில் நடை பெறவில்லை என்பதை உலகுக்குக் காட்டவே இந்த அரசாங்கம் உலகத் தரப்பினரின் மனதைக் கவரும் வகையில் சலுகைகளை கொடுக்கிறது.

அதேபோன்று ஓ.எம்.பி. மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்களை கொண்டு வந்து காணாமல் ஆக்கப்பட்டஉறவுகளின் தாய்மார்களின் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்ய நினைக்கிறது. எது, எப்படி இருந்தாலும் எங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என் பதில் நாங்கள் உறுதியாக இருக்கி
றோம். எனவே பல்கலைக்கழக மாண வர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்டு எமது உறவுக ளுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும். – என்று மனுவல் உதயச்சந்திரா மேலும் தெரிவித்தார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles