காணாமல் போன சிறுவன் மீட்பு!

எப்பாவல – கிரலோகம, கெடதிவுல பிரதேசத்தில் காணாமல் போன ஒன்பது வயது சிறுவன், ரிக்கில்லகஸ்கட – ஜோன்ஸ்லன் தோட்டத்திலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மின்சார திருத்த வேலைகளில் ஈடுபடும் நபர் ஒருவரின் நெருங்கிய நண்பரின் வீட்டில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மின்சார திருத்த வேலை செய்யும் நபரையும்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் கடந்த 19ஆம் திகதி இரவு முதல் காணாமல் போயுள்ளதாக தாய் காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles