காணாமல் போன பல்கலை மாணவன் 10நாட்களுக்குப் பின் பல்கலைக்கழகம் திரும்பியுள்ளார்

காணாமல் போனதாகக் கூறப்படும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் 10 நாட்களுக்குப் பின்னர் பல்கலைக்கழகம் திரும்பியுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித், மாணவர் நேற்று (12) ஆய்வுகளில் பங்கேற்றதாக தெரிவித்தார்.

பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட சிரேஷ்ட குழுவின் மாணவரான இவர் கடந்த 03ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் கடவட கணேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய மாணவராவார்.

Related Articles

Latest Articles