காதலுக்காக அரச பட்டத்தை துறந்த இளவரசிக்கு 26 ஆம் திகதி டும்…டும்…டும்

ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோவின் மகளும், அந்த நாட்டின் இளவரசியுமான மகோ (வயது 29), கடந்த 2012-ம் ஆண்டு கல்லூரியில் படித்த போது தன்னுடன் படித்த கீ கோமுரோ (29) என்னும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞருடன் நட்பாக பழக ஆரம்பிக்க, பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதை தொடர்ந்து, 2017-ம் ஆண்டு இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.

பல நூற்றாண்டுகளாக தொடரும் அரச வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டால் அவர் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும்.

காதலனை கைப்பற்றுவதற்காக தனது அரச பட்டத்தை துறந்ததுடன், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் பெண்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலரயைும்

நிராகரித்தார் மகோ.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நவம்பரில் தங்களின் திருமணம் நடைபெறும் என மகோ-கீ கோமுரோ ஜோடி அறிவித்த நிலையில், கீ கோமுரோவின் தாயின் கடன் பிரச்சினையால் இந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கீ கோமுரோ தனது சட்டப்படிப்பை தொடர்வதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். 3 ஆண்டுகளாக தனது காதலியை பிரிந்து இருந்த அவர் கடந்த திங்கட்கிழமை ஜப்பான் திரும்பினார்.

இந்த நிலையில் மகோ-கீ கோமுரோவின் திருமணம் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்களின் திருமணத்தை உள்ளூரில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் பதிவு செய்வார்கள் என்றும், திருமணத்துக்கு பிறகு இருவரும் அமெரிக்காவில் குடியேறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles