ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் உள்ளிட்ட 5 பேர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
யுவதி ஒருவருக்கு வாழ்த்து அட்டை பெற்றுக்கொடுத்தமையை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொட, மாகொல வீதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு அருகில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.