காதல் தகராறு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய காதலன்

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறைக் கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளைத் தீ மூட்டி ஓட்டோ  மற்றும் பட்டா வாகனம் என்பவற்றின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தபோது வீட்டில் வசிக்கும் யுவதிக்கும் இளைஞர் ஒருவருக்கும் காதல் தொடர்பு இருந்தது எனவும், தற்போது இருவரும் முரண்பட்டு பிரிந்துள்ளமையால் காதலனே தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான காதலனைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles