காபன் வெளியேற்றத்தை குறைக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு கொரியா பாராட்டு

COP- 27 மாநாட்டில் பங்குபற்றவதற்காக எகிப்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கொரிய ஜனாதிபதியின் காலநிலை மற்றும் சுற்றாடல் விவகாரங்களுக்கான விசேட தூதுவரும் அந்நாட்டுத் தூதுக் குழுவின் தலைவியுமான நா குயூங் வொனுக்கும் (Na Kyung-Won) இடையிலான சந்திப்பு நேற்று (07) பிற்பகல் நடைபெற்றது.

காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள இலங்கை எடுத்துள்ள முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த நா குயூங் வொன், நாட்டில் காபன் வெளியேற்ற வீதம் ஏற்கனவே குறைவாக இருக்கின்றபோதிலும் அதன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காகவும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை முறியடிப்பதற்கு திறன் மேம்பாடு இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார். காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் நிறுவ வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, காலநிலை மாற்றம் குறித்து அனைவரும் அறிவு பெறக்கூடிய உயர்கல்வி நிறுவனமாக இது இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் தாம் பொதுநலவாய செயலகம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஏற்கனவே கலந்துரையாடியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் ஒப்புதலையும் பெற்று இதனை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles