பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில், கெலி ஓயா – கரமட பிரதேசத்தில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (11) மாலை இடம் பெற்ற மேற்படி விபத்தின் போது பிலியந்தளையைச் சேர்ந்த பியூமிகா ஜனனி டயஸ் 61 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து, கெலிஓய பிரதேசத்திற்கு உறவினர்கள் வீட்டுக்கு காரில் பயணித்த குடும்பத்தினரே விபத்தில் சிக்கியுள்ளனர்
குறித்த கார் கெலிஓய நகரில் இருந்து உறவினர்கள் வீடு அமைந்துள்ள கரமட பிரதேசத்திற்கு குறுக்கு வழியால் செல்ல முற்பட்ட சமயமே புகையிரதத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது மேற்படி பிரதேசத்தில் குறுகியகால இடைவெளிக்குள் சுமார் 11 விபத்திற்குள் வரை இடம் பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
