காலி, மக்குலுவல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணி தாயொருவரும், அவரின் 7 வயது மகளும் பலியாகியுள்ளனர். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
காலி- மக்குலுவ பகுதியிலுள்ள ரயில் குறுக்கு வீதியில் பயணித்த கார்மீது ரயில் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த காரியல் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் பயணித்துள்ளனர்.










