கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார்.

சமூக ஊடகங்​களில் கணிச​மான ரசிகர் பட்​டாளத்​தைக் கொண்டுள்ள இவர், நேற்று முன் தினம் படப்​பிடிப்பை முடித்​து​விட்டு நள்ளிர​வில் ஜெய்ப்​பூரில் உள்ள தனது வீட்​டுக்கு காரில் திரும்​பிக்கொண்​டிருந்தார். ஷிப்ரா பாத் சாலை​யில் கார் வந்து கொண்​டிருந்​த​போது எதிரில் இருந்த தடுப்​புச் சுவரில் மோதி, திடீரென கவிழ்ந்​தது.

இதில் ஹர்​ஷில் காலியா, தலை​யில் பலத்த காயம் ஏற்​பட்​டது. அக்கம் பக்​கத்​தினர் அவரை மீட்டு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் அவர் ஏற்​கெனவே இறந்து​விட்​ட​தாகத் தெரி​வித்​தனர். இது பற்றி போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

Related Articles

Latest Articles