கார் விபத்தில் தந்தை பலி – மகன் காயம்! கம்பளையில் சோகம்…!!

கம்பளை – நாவலப்பிட்டி பிரதான வீதி எக்கால பகுதியில் வைத்து காரொன்று, வீதியைவிட்டு விலகி வீடொன்றின் வாசல் மீது வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பளை நீதிமன்றத்தில் கடமையாற்றிவந்த உலப்பனையைச் சேர்ந்த நீல் ரோஹன அபயரட்ண என்ற குடும்பஸ்தரே விபத்தில் பலியாகியுள்ளார்

கடந்த 20 ஆம் திகதி இரவு 8 மணியளவில் தனது 16 வயது மகனுடன் பயணித்த சந்தர்ப்பத்திலேயே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த சிறுவன் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ப்பெற்று வருகின்றார்.

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை எக்கால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பளை நிருபர்

Related Articles

Latest Articles