காலி முகத்திடல் இலவச 4G – 5G

இன்று (15) முதல்  காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4G – 5G வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, போராட்ட களத்துக்கு அருகாமையில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை அதற்கான இணைப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14) காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில், பெரிய வெள்ளியை நினைவுகூரும் வகையிலும், ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாகவும் இன்று காலி முகத்திடல் பகுதியில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles