போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமையால் பாடசாலைக்கு தாமதமாக வரும் மாணவர்கள் தொடர்பில் சலுகைகளை வழங்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அது தொடர்பில் இரண்டொரு தினங்களில் கல்வியமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிடும் என்றும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபையில் மேலும் தெரிவித்த அமைச்சர்:
நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாமதமாகி பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும்போதும் மாணவர்களின் சீருடை பிரச்சினை மற்றும் காலணிகளை அணியாதபோதும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் அது தொடர்பான சுற்றறிக்கை ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
