“காவலராக மாறி நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை சுமந்துள்ளார் ஜனாதிபதி” – தேரர் பாராட்டு

“ஒரு விடயம் நடக்க வேண்டுமாயின் தகுதியானவர்களுக்கே அது வழங்கப்பட வேண்டும் என்ற வார்த்தைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று இந்த நாட்டின் காவலராக மாறி கட்டியெழுப்பும் பொறுப்பை சுமந்து வருகின்றார். தூர நோக்குடன் செயற்படும் தலைவர் என்ற வகையில் இந்த நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி ரணில், நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்புவார்.”

– இவ்வாறு மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. வலவாஹெங்குனவெவே தம்மரத்ன நாயக்க தேரர் தெரிவித்தார்.

மிஹிந்தலை புனிதத் தளத்துக்கு ஜனாதிபதி பயணம் மேற்கொண்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

இங்கு அனுசாசன உரை நிகழ்த்திய கலாநிதி வண. வலவாஹெங்குனவெவே தம்மரதன நாயக்க தேரர்,

“ஒரு விடயம் நடக்கவேண்டுமாயின் தகுதியானவர்களுக்கே அது வழங்கப்பட வேண்டும்’ என்று ஹூனுவடயே கதையில் கூறப்படுகின்றது. அன்று பல ஊடகங்களும் அரசியல்வாதிகளும் உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர். தெற்கே போய் பயங்கரவாதி என்கிறார்கள், நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே அவ்வாறு கூறினார்கள். அதேபோன்று, பல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் இருந்தன. ‘ரணிலால் முடியாது’ என்று கூறிய அந்தக் கருத்தை ‘ரணிலுக்கு ஜனாதிபதி பதவி வழங்க வேண்டும்’ என்று கூறி, அன்று நமது மங்கள சமரவீர அதனைத் திருத்தி முன்வைத்தார். இவரைப்போலவே ஸ்ரீபதி சூரியஆரச்சி உட்பட இன்னும் பலர் இருக்கிறார்கள்.

1989 ஆம் ஆண்டில் எல்.ரீ.ரீ.ஈ. ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) என்பன செயற்பட்டன. டிரான்ஸ்போர்மர்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன. மறுபுறம் குண்டுகள் வெடித்தன. ஆனால், அந்த நேரத்தில் கூட, நாடு இத்தகைய அழுத்தங்களுக்கோ, இவ்வளவு கடினமான சூழ்நிலைக்கோ தள்ளப்படவில்லை.

இன்று, ஒரு பக்கம், கொரோனா தொற்று, மறுபக்கம், அரசியல் ஸ்திரமின்மை. அதே போல் இனவாதம், மதவாதம் அனைத்தும் உள்ளன. நாடு இருந்தாலும், இறுதியில் நாட்டில் சட்டம் இல்லாமல் போனதை நாம் அறிவோம்.

பொலிஸாரின் வாகனங்களைப் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் சோதனை செய்கின்றனர். சட்டத்தை தனிநபர்கள் கையில் எடுத்தனர். பொலிஸாரை அடிக்க ஆரம்பித்தனர். ஆயுதங்கள் திருடப்பட்டன. இதுபோன்ற பல்வேறு விடயங்களைச் செய்தார்கள்.

இறுதியில், ஒரு வரம் போல் இந்த நாட்டுக்கு நல்லது செய்ய முன் வந்தீர்கள். உங்கள் வீடு கூட ரோயல் கல்லூரிக்கு எழுதப்பட்டுள்ளது. உலகத்திலோ அல்லது இலங்கையிலோ உங்களுக்கு வேறு ஒரு அங்குல நிலம் கூட இல்லை. இருந்தவையும் பல்கலைக்கழகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு தன்னலமற்ற குணம் கொண்டவர் தான் நமது ரணில்.

கடந்த காலங்களில் அவர் கூறியவற்றை மக்கள் ஏளனமாகப் பேசினர். நகைப்புக்கு உள்ளாக்கினர். ஆனால், கடைசியில், இந்த கடினமான நேரத்தில் தண்டவாளத்தில் தலையை வைத்தது போல ஒரு செயலைச் செய்ய வேண்டியதாயிற்று. பிரதமர் பதவியை ஏற்றார், ஜனாதிபதி பதவியையும் ஏற்றுக்கொண்டார். ஏனையோருக்கும் ஜனாதிபதிப் பதவியை ஏற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் யாரும் ஏற்க முன்வரவில்லை.

என்ன கூறினாலும் கடைசியில் அரச பதவியைப் பெறுவதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த நாட்டைப் பொறுப்பேற்கவும், இந்த மாபெரும் புனித பொக்கிசங்களுக்கு பொறுப்பாக இருப்பதற்கும், பல்வேறு மதங்கள் மற்றும் வெவ்வேறு இனங்கள் அனைத்தையும் பொறுப்பேற்கக் கிடைப்பதும் ஒரு அதிர்ஷ்டம்” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles